செய்திகள்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி

ஜார்கண்ட் தேர்தல் முடிவு: மக்களுக்கு கிடைத்த வெற்றி - மம்தாபானர்ஜி கருத்து

Published On 2019-12-23 22:20 GMT   |   Update On 2019-12-23 22:20 GMT
ஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தனது டுவிட்டர் வலைத்தளபக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் ‘வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கிடைத்து உள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், “ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அம்மாநில மக்கள் ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது’ என்றார்.
Tags:    

Similar News