செய்திகள்
எழுத்தாளர் நஞ்சுண்டன்

பெங்களூரில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த எழுத்தாளர்

Published On 2019-12-23 07:33 GMT   |   Update On 2019-12-23 07:33 GMT
பெங்களூரில் வீட்டில் அழுகிய நிலையில் எழுத்தாளர் நஞ்சுண்டன் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் புள்ளியல்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தவர் நஞ்சுண்டன் (58).

இவரது மனைவி, மகன் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். நஞ்சுண்டன் பெங்களூரு கெங்கேரி பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இவரின் மனைவி கணவரை பலமுறை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தார். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பெங்களூரு சென்றார்.

அங்கு நஞ்சுண்டனின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது வீட்டுக்குள் நஞ்சுண்டன் உடல் அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மாரடைப்பு மற்றும் மூளை நரம்புகள் வெடித்ததில் நஞ்சுண்டன் உயிரிழந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் கன்னடத்தில் உள்ள பல உன்னதமான படைப்புகளை தமிழில் மொழி பெயர்த்திருந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு ‘அக்கா’ என்ற கன்னட இலக்கிய மொழிபெயர்ப்பு நூலுக்காக இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
Tags:    

Similar News