செய்திகள்
பீகார் மாநில துணை முதல்-மந்திரி சு‌ஷில் குமார் மோடி

ஜி.எஸ்.டி. வரி உயருமா? - மந்திரிகள் குழு அமைப்பாளர் விளக்கம்

Published On 2019-12-21 21:49 GMT   |   Update On 2019-12-21 21:49 GMT
ஜி.எஸ்.டி. வரி குறித்து ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சு‌ஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. வரி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழுவின் அமைப்பாளரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சு‌ஷில் குமார் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. உயரும் என்று வெளியாகும் தகவல்கள் தவறானவை. ஜி.எஸ்.டி. வருவாய் ஸ்திரத்தன்மை அடையும் வரை, வரிவிகிதத்தை உயர்த்தவோ, குறைக்கவோ முடியாது. பொருளாதார மந்தநிலை நிலவும் போது, வரியை குறைக்க முடியாவிட்டால், அதை உயர்த்தவும் கூடாது.

மேலும், ஜி.எஸ்.டி.யை ஆண்டுக்கு ஒரு தடவை மாற்றி அமைத்தால் போதும், ஒவ்வொரு கூட்டத்திலும் மாற்ற வேண்டியது இல்லை என்று கடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News