செய்திகள்
குல்தீப் சிங் செங்கார்

செங்காருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஆவேசம்

Published On 2019-12-21 01:50 GMT   |   Update On 2019-12-21 01:50 GMT
குல்தீப் சிங் செங்காருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அளித்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
உன்னாவ் :

உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் முன்னாள் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும், சகோதரியும் கூறியதாவது:-

குல்தீப் சிங் செங்காருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முழுமையான நீதியைப் பெற முடியும். அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அளித்த தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை. அவர் என்றோ ஒரு நாள் வெளியே வந்தால் எங்களை கொன்று விடுவார்.

இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

போக்சோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்க வகைசெய்து கடந்த ஆகஸ்டு மாதம் திருத்தம் செய்யப்பட்டாலும், இந்த வழக்கில் சம்பவம் 2017-ம் ஆண்டில் நடந்ததால் செங்கார் மரண தண்டனைக்கு தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News