செய்திகள்
ஜார்க்கண்ட் தேர்தல்

ஜார்க்கண்ட் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தல் - 70.83 சதவிகிதம் வாக்குப்பதிவு

Published On 2019-12-20 14:09 GMT   |   Update On 2019-12-20 14:09 GMT
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.

சந்தல் பர்கானா பிராந்தியத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 16 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 

இந்நிலையில் அமைதியாக நடந்த முடிந்த ஐந்தாம் கட்ட தேர்தலில் 70.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News