செய்திகள்
சோனியா காந்தி

நீதிக்காக போராடும் மாணவர்களுக்கு என்றும் துணையாக நிற்போம் - சோனியா காந்தி

Published On 2019-12-20 13:56 GMT   |   Update On 2019-12-20 13:56 GMT
போராட்டக்காரர்களை ஒடுக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி அரசியலமைப்பையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் காங்கிரஸ் பாதுகாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை வீடியோ வடிவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பாரபட்சமானது, நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பால் ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.



அரசின் இதுபோன்ற தவறான முடிவுகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும் குரலை உயர்த்தவும் மக்களுக்கு உரிமை உள்ளது.

மக்களின் குரல்களுக்கு மதிப்பளிக்காத பாஜக அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு காட்டுமிராண்டித்தனமான பலப்பிரயோகத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

ஜனநாயகத்தில் இத்தகைய நடவடிக்கை ஏற்புடையதல்ல. மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை தத்துவங்களை உயர்த்தி பிடிக்க காங்கிரஸ் கட்சி முழு உறுதிப்பாட்டுடன் உள்ளது. நீதிக்காக போராடும் மாணவர்களுக்கு நாங்கள் என்றும் துணையாக நிற்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News