செய்திகள்
என்ஆர்சி பதிவு (கோப்பு படம்)

தேசிய குடிமக்கள் பதிவேட்டை பீகாரில் அமல்படுத்தமாட்டோம் - நிதிஷ் குமார்

Published On 2019-12-20 10:28 GMT   |   Update On 2019-12-20 10:28 GMT
பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியலில் பல லட்சம்பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். 



இந்நிலையில், பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்மந்திரி மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News