செய்திகள்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

குடியுரிமை திருத்த சட்டம் வெளிநாட்டினருக்கானது மட்டுமே - ஒடிசா முதல்-மந்திரி சொல்கிறார்

Published On 2019-12-18 20:23 GMT   |   Update On 2019-12-18 20:23 GMT
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது வெளிநாட்டினருக்கானது மட்டுமே என ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஒடிசாவிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் நடந்த அமைதி பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் பேசிய தலைவர்கள், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மாநில அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் நேற்று தனது நிலைப்பாட்டை முதல்-மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது வெளிநாட்டினருக்கானது மட்டுமே. எனவே இதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாங்கள் ஆதரிக்கமாட்டோம். இது தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எங்கள் எம்.பி.க்கள் தெளிவுபடுத்தி விட்டனர்’ என்று தெரிவித்தார்.

எனவே மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், வதந்திகளை நம்பி போராட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News