செய்திகள்
பிரியங்கா காந்தி

மாணவர்களின் குரலை கேட்கும் அரசை தேர்ந்தெடுங்கள் - பிரியங்கா காந்தி

Published On 2019-12-18 11:59 GMT   |   Update On 2019-12-18 12:44 GMT
மாணவர்களின் குரலை கேட்கும் அரசாங்கத்தை தேர்ந்தெடுங்கள் என ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான ஐந்தாம்கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பகூர் மாவட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

‘பாஜக அரசு பழங்குடி மக்களின் நிலங்களை பறித்து செல்வந்தர்களுக்கு வழங்குகிறது. 



அசாமில் கொண்டுவரப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு தோல்வியடைந்துள்ளது. ஆகையால், பாஜக அரசு புதிதாக திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட சட்டம் மாணவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், நாடுமுழுவதும் மாணவர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போலீசாரின் தடியடி தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

ஆகையால், மாணவர்களின் குரலை கேட்கும், விவசாயகடன்களை தள்ளுபடி செய்யும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பழங்குடி மக்களின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கத்தை பாதுகாக்கும் அரசாங்கத்தை (காங்கிரஸ்) வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என உங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News