செய்திகள்
ஜிஎஸ்டி

மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்க மத்திய அரசு இலக்கு

Published On 2019-12-18 01:49 GMT   |   Update On 2019-12-18 02:27 GMT
நடப்பு நிதியாண்டின் மீதி உள்ள 4 மாதங்களில், மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுடெல்லி :

பொருளாதார மந்தநிலை காரணமாக, வரி வசூல் குறையும் என்று கருதப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், நடப்பு நிதியாண்டின் மீதி உள்ள 4 மாதங்களில், மாதந்தோறும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற மறைமுக வரிகளை கவனிக்கும் வரித்துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூ‌‌ஷண் பாண்டே இதை தெரிவித்தார்.



இந்த இலக்கை அடைய வரித்துறை ஊழியர்கள், முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும் என்றும், நேர்மையாக வரி செலுத்துவோரை துன்புறுத்தாமல் இலக்கை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதுபோல், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.13 லட்சத்து 35 ஆயிரம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News