செய்திகள்
கவர்னர் ஜக்தீப் தங்கர் மற்றும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் ஊர்வலம் சென்ற மம்தா பானர்ஜிக்கு கவர்னர் கண்டனம்

Published On 2019-12-17 00:02 GMT   |   Update On 2019-12-17 00:02 GMT
மேற்கு வங்காளத்தில் ஊர்வலம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கொல்கத்தா:

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காளத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இந்த சட்டத்துக்கு முதல்-மந்திரியும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரசார் நேற்று பிரமாண்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் பங்கேற்றார். இதற்கு கவர்னர் ஜெக்தீப் தங்கர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘இந்த நாட்டின் சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக முதல்-மந்திரியும், மந்திரிகளும் தெருக்களில் ஊர்வலம் செல்வதால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளை தவிர்த்து விட்டு, மாநிலத்தில் இயல்பு நிலையை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதைப்போல மாநிலத்தில் வன்முறைகளை தடுத்து அமைதியை ஏற்படுத்துமாறு போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த பிரபலங்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருந்தார்.

Tags:    

Similar News