செய்திகள்
எரிக்கப்பட்ட அரசு பஸ்

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்: அரசு பஸ்கள் எரிப்பு - மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

Published On 2019-12-15 13:31 GMT   |   Update On 2019-12-15 13:31 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ள நிலயில் டெல்லியிலும் தீவிரமடையும் போராட்டத்தில் அரசு பஸ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் சில மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலயில் டெல்லியிலும் தீவிரமடையும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி பாரத் நகர் பகுதியில் இன்று மாலை அரசு பஸ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.பிறபகுதிகளில் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன.



மேலும், சில இடங்களில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து முழக்கங்களை எழுப்புவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஒக்ஹ்லா விஹார், ஜசோலா விஹார் ஷஹீன் பாக் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் இன்று மாலையில் இருந்து மூடப்பட்டுள்ளன. மேற்கண்ட நிலையங்களில் மெட்ரோ ரெயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News