செய்திகள்
சோனியா காந்தி

ஜனநாயகத்தை பாதுகாக்க கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது - சோனியா காந்தி அறைகூவல்

Published On 2019-12-14 10:11 GMT   |   Update On 2019-12-14 10:11 GMT
டெல்லியில் இன்று நடைபெற்ற 'இந்தியாவை காப்பாற்றுங்கள்’ பேரணியில் பேசிய சோனியா காந்தி நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி ராம்லீலா திடலில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ‘இந்தியாவை காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்துடன்  மாபெரும் பேரணி நடைபெற்றது.

சுமார் ஒரு லட்சம் பேர் திரண்ட இந்த பேரணியில் பேசிய சோனியா காந்தி, ’மோடி-அமித் ஷா தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஜனநாயக ரீதியிலான இதர அமைப்புகளையும் மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.



உண்மையான நிலவரங்களை எல்லாம் மறைப்பதும் மக்களோடு மக்களை மோத விடுதும்தான் இவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது. ஒவ்வொரு நாளும் அரசியலமப்பு சட்டத்தை மீறும் இவர்கள் அரசியலமைப்பு தினத்தையும் கொண்டாடுகின்றனர்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்தியாவின் ஆன்மாவை கிழித்துவிடும் என்பதால் இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம்.

குழப்பமான தலைமை, பதற்றமான நாடு என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அநீதிக்கு இலக்காகி கொடுமைக்குள்ளாவதும் மிகப்பெரிய குற்றமாகும்.

ஜனநாயகத்தையும் அரசியலைப்பையும் காப்பாற்ற வேண்டிய நேரமிது. நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. இதற்காக நாம் மிக கடினமாக போராட வேண்டும்’ என்றும் சோனியா காந்தி தெரிவித்தார்.
Tags:    

Similar News