செய்திகள்
நிர்மலா சீதாராமன்

வெங்காய விலை படிப்படியாக குறைகிறது - நிர்மலா சீதாராமன் தகவல்

Published On 2019-12-13 20:15 GMT   |   Update On 2019-12-13 20:15 GMT
விளைச்சலை சந்தைக்கு கொண்டு வர அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் வெங்காய விலை படிப்படியாக் குறைகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வெங்காய விலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட மழை, வேறு சில பகுதிகளில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடரால் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. எனவே வெங்காயத்தின் விலை அதிகரித்தது.

அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் சில இடங்களில் வெங்காய விலையில் மாற்றம் தெரிகிறது. வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. சில இடங்களில் குறைந்திருக்கிறது. பல இடங்களில் முற்றிலும் குறையவில்லை என்றாலும், படிப்படியாக குறைகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பொருளாதாரம் தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் விவரிக்கும்போது, ‘ரூ.3.38 லட்சம் கோடி பட்ஜட்டில் 66 சதவீதம் ஏற்கனவே அரசால் செலவிடப்பட்டு உள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நவம்பர் மாதம் வரை ரூ.98 ஆயிரம் கோடி மூலதன செலவினங்களை மேற்கொண்டுள்ளன. ஆண்டின் மீதமுள்ள காலத்தில் மேலும் ரூ.60 ஆயிரம் கோடி செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News