செய்திகள்
சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி

வெளிநாட்டு தாய்க்கு பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது - ராகுல் மீது பாஜக எம்.பி. பாய்ச்சல்

Published On 2019-12-13 13:34 GMT   |   Update On 2019-12-13 13:34 GMT
பாராளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் சாணக்கியரை மேற்கோள் காட்டி பேசிய பாஜக எம்.பி. வெளிநாட்டு தாய்க்கு பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது என குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் கற்பழிப்புகளால் ‘ரேப் இன் இந்தியா’ என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என பேசியிருந்தார்.

இந்த விவகாரம் பாராளுமன்ற மக்களவையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது.

இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.



இப்படிப்பட்ட உறுப்பினர் இந்த அவையில் அமருவதற்கே அருகதையற்றவர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

அவரைத்தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி. சஞ்சய் ஜைஸ்வால், (அர்த்த சாஸ்திரம் இயற்றிய) சாணக்கியரை மேற்கோள் வெளிநாட்டு தாய்க்கு பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது என ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டார்.

ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் ஒரு பெண்ணின் மகன் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது சரியல்ல. இந்த நாட்டுக்கு அவர் ஏற்படுத்திய தலைக்குனிவுக்கு என்ன விமர்சித்தாலும் போதாது. என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News