செய்திகள்
வழக்கறிஞர்கள்

தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் இவர்களுக்கு மட்டும் கட்டணம் இல்லையா?

Published On 2019-12-13 06:53 GMT   |   Update On 2019-12-13 06:53 GMT
இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் இவர்களுக்கு மட்டும் கட்டணம் இல்லை என்ற தகவல் வைரலாகியுள்ளது.



மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வழக்கறிஞர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளில், டிசம்பர் 1, 2019 முதல் நாடு முழுக்க அனைத்து மாநிலங்களில் வசிக்கும் வழக்கறிஞர்கள் இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடிகளில் நிரந்தரமாக கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வழக்கறிஞர்கள் தங்களின் அடையாள அட்டையை காண்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலும் இடம்பெற்று இருப்பதாக கடிதம் ஒன்றும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய ஆய்வுகளில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் வழக்கறிஞர்கள் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை என எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள கடிதம் போலியானது என்றும் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க சாவடிகளில் வழக்கறிஞர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News