செய்திகள்
மின்சப்ளை துண்டிக்கப்பட்ட காவல் நிலையம்

காவல் நிலையங்களின் மின்சப்ளையை துண்டித்த பஞ்சாப் மின்சார வாரியம்

Published On 2019-12-13 03:43 GMT   |   Update On 2019-12-13 10:29 GMT
பஞ்சாப் மாநிலத்தில் கரண்ட் பில் கட்டாததால் சில காவல் நிலையங்களுக்கான மின்சப்ளையை மின்சார வாரியம் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
லூதியானா:

பஞ்சாப் மாநிலத்தில் அரசுத்  துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள என பல்வேறு அரசு கட்டிடங்களுக்கான மின் கட்டணம் செலுத்தப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், பணம் செலுத்தப்படவில்லை.

இதையடுத்து பஞ்சாப் மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்களுக்கான மின்சப்ளையை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 



அவ்வகையில் லூதியானாவில் உள்ள 10 முதல் 14 காவல் நிலையங்களில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் இல்லாததால் காவல் நிலையங்கள் வெளிச்சம் இன்றி இருட்டாக காணப்பட்டன. விரைவில் கட்டணத்தை செலுத்தி, மின்சப்ளை பெறுவதற்கான நடவடிக்கையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

மக்களை பாதிக்கும் என்பதால் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான மின்சாரத்தை மின்சார வாரியம் துண்டிக்காமல் விட்டுள்ளது. 
Tags:    

Similar News