செய்திகள்
கவுகாத்தி விமான நிலையம்

அசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து

Published On 2019-12-12 06:38 GMT   |   Update On 2019-12-12 06:38 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்ததால், அசாம் மாநிலத்தின் கவுகாத்தி, திப்ருகர் பகுதிகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி:

மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளல் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வன்முறையை தடுப்பதற்காக துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கவுகாத்தி, திப்ருகர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், இன்றும் நாளையும் கவுகாத்தி, திப்ருகர் நகரங்களுக்கான விமான சேவையை பல்வேறு விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை திரும்ப பெறலாம் அல்லது மாற்று விமானத்தில் டிக்கெட் பதிவு செய்யலாம். இதற்காக டிக்கெட் தொகையில் பிடித்தம் எதுவும் செய்யப்பட மாட்டாது எனவும் விமான நிறுவனங்கள் கூறியுள்ளன. 

கொல்கத்தாவில் இருந்து திப்ருகர் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News