செய்திகள்
வைரலாகும் சுந்தர் பிச்சை வைரல் பதிவு

இந்திய அரசியல் பற்றி சுந்தர் பிச்சை இப்படி கருத்து கூறினாரா?

Published On 2019-12-12 06:23 GMT   |   Update On 2019-12-12 06:23 GMT
கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்திய அரசியல் பற்றி கூறியதாக இணைய பதிவு வைரலாகியுள்ளது.



கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. வைரல் பதிவில் அரசியல் பற்றிய கருத்துக்களுடன் சுந்தர் பிச்சையின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

வைரல் பதிவுகளில், "எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை, ஆனால் இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பல லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பது கவலை அளிக்கிறது. இந்தியா, மக்களின் உணவு விஷயத்தை விட்டுவிட்டு அவர்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் நல்ல சிந்தனை கொண்டவர்களின் கைகளில் தான் இருக்கிறது" என சுந்தர் பிச்சை கூறியதாக கூறப்பட்டுள்ளது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், சுந்தர் பிச்சை இத்தகைய தகவலை வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதே பதிவு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வைரலானதும் தெரியவந்துள்ளது. ட்விட்டரில் இந்த பதிவு 2017 முதல் பகிரப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்ட போது, இந்த பதிவு வைரலானது.

அந்த வகையில் சுந்தர் பிச்சை கூறியதாக வைரலாகும் அரசியல் கருத்துக்களை அவர் கூறவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Tags:    

Similar News