செய்திகள்
சோனியா காந்தி

அரசியலமைப்பு வரலாற்றில் இன்று 'கருப்பு நாள்’ - சோனியா காந்தி

Published On 2019-12-11 17:43 GMT   |   Update On 2019-12-11 17:43 GMT
குடியுரிமை சட்டம் மாநிலங்கவையில் நிறைவேறிய இன்று இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும், ஆதராகவும் இரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

இறுதியில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதன் மூலம் குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 

இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதல் பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

''இந்த நாள் இந்திய அரசியலமைப்பு வரலாற்றின் கருப்பு நாளாகும். இந்தியாவின் பண்முகத்தன்மையில் நம்பிக்கையில்லாத குறுகிய எண்ணம் கொண்ட சக்திவாய்ந்தவர்களுக்கே இந்த மசோதா நிறைவேறியது வெற்றியாக கருதப்படும். இந்திய நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கே இந்த மசோதா சவால் விடுகிறது.     

நம் நாடு ஒரு சிலரின் பாதுகாப்பின்மையால் ஒருபோதும் உடைக்கப்படாத பெருமையுடன் உள்ளது. 

சுதந்திரமான இந்தியா என்பது இங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து அவர்களது குரல்கள் கேட்கப்பட்டு நமது அரசியல் சக்திகளும், நமது அராசாங்கங்களும் இந்த நாட்டின் குடிமக்களின் மாற்றியமைக்க முடியாத உரிமைகளைப் பாதுகாக்க தங்களை அற்பணிக்க வேண்டும் என்ற அறிவாற்றலில் நாங்கள் எப்போதும் நிலையாக உள்ளோம்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News