செய்திகள்
பிரதமர் மோடி

இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டின் முக்கியமான நாள் - பிரதமர் மோடி

Published On 2019-12-11 16:57 GMT   |   Update On 2019-12-11 16:57 GMT
குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதையடுத்து இன்று இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டின் முக்கியமான நாள் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும், ஆதராகவும் இரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

இறுதியில் இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகினது. 

இதன் மூலம் குடியுரிமை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.  இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதல் பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். 


டுவிட்டரில் அவர் பதிவிட்ட செய்தியாவது, ''இரக்கமும், சகோதரத்துவமும் நிறைந்த நமது நாட்டில் இன்று முக்கியமான நாள். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.களுக்கும் வாழ்த்துக்கள். பல ஆண்டுகளாக மதரீதியிலாக துன்பங்களை அனுபவித்துவரும் நபர்களின் துயரை தணிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News