செய்திகள்
மாநிலங்களவையில் நிறைவேறிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது

Published On 2019-12-11 15:44 GMT   |   Update On 2019-12-11 15:44 GMT
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது.
புதுடெல்லி:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் இன்றிரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
 
இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

இந்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரது ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
Tags:    

Similar News