செய்திகள்
மாநிலங்களவையில் அமித் ஷா

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வி

Published On 2019-12-11 14:53 GMT   |   Update On 2019-12-11 14:53 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீது இன்றிரவு மாநிலங்களவையில் காரசாரமான விவாதம் நடைபெறும் நிலையில் இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் தோல்வியடைந்தது.
புதுடெல்லி:

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு எதிராகவும் ஆதராகவும் இன்றிரவு வரை அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகின்றது.



இதற்கிடையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பு கூடாது என 124 எம்.பி.க்களும் அனுப்ப வேண்டும் என 99 எம்.பி.க்களும் வாக்களித்திருந்ததால் 25 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
Tags:    

Similar News