செய்திகள்
இஸ்ரோ சிவன்

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்

Published On 2019-12-11 10:59 GMT   |   Update On 2019-12-11 10:59 GMT
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஸ்ரீஹரிகோட்டா:

இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளின் 9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 திட்டமிட்ட நேரப்படி இன்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட
இந்த ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75-வது ராக்கெட் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த தருணத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி. இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News