செய்திகள்
பாரதியார்

தேசப்பற்று, சமூக சீர்திருத்தத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்- பிரதமர் புகழாரம்

Published On 2019-12-11 04:41 GMT   |   Update On 2019-12-11 04:41 GMT
தேசப்பற்று, சமூக சீர்திருத்தம் மற்றும் கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் மகாகவி பாரதியார் திகழ்ந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி:

முண்டாசுக் கவிஞன் பாரதியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பாரதியார் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.  அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.



சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News