செய்திகள்
மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கி‌‌ஷன் ரெட்டி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி

Published On 2019-12-10 23:08 GMT   |   Update On 2019-12-10 23:08 GMT
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார்.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 9-ந் தேதி அனுமதி அளித்தது. இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கி‌‌ஷன் ரெட்டி பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், ராமர் கோவில் கட்டவும், அயோத்தி நகர மேம்பாட்டுக்காகவும் ஒரு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.

அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது, அவர்களது அதிகாரம், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது உள்பட இதர பணிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அதே காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அதன்படி, 3 மாத காலத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News