செய்திகள்
அவசர தொடர்பு எண்

வைரலாகும் இந்த அவசர தொடர்பு எண்களை நம்பலாமா?

Published On 2019-12-09 07:06 GMT   |   Update On 2019-12-09 07:06 GMT
நாட்டையே உலுக்கிய தெலுங்கானா பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கான அவசர தொடர்பு எண் பற்றிய தகவல்கள் வைரலாகியுள்ளது.



தெலுங்கானா பெண் மருத்துவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து, அவசர காலத்தில் பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் அடங்கிய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. ஆய்வில் இதுபோன்று வைரலாகும் பெரும்பாலான எண்கள் பயனற்று கிடப்பது தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் வைரலாகும் குறுந்தகவல் ஒன்றில், மும்பை ரெயில்வே உதவி எண் நிர்பயா உதவி எண் (9833312222) என்ற வாக்கில் பகிரப்படுகிறது. வைரல் குறுந்தகவலில் மற்றவர்களுக்கும் பகிருங்கள் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. உண்மையில் இந்த எண் மும்பை ரெயில்வே காவல் துறை சார்பில் 2015 ஆம் ஆண்டு ஆக்டிவேட் செய்யப்பட்டது.



பின் 2018 ஆம் ஆண்டு இந்த எண் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த சேவை புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோருக்காக துவங்கப்பட்டது. மேலும் இந்த சேவை நகரம் முழுக்க துவங்கப்பட்டது.

உண்மையில் இந்தியா முழுக்க பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர உதவி எண்: 1091 ஆகும். இந்த எண் பெண்களுக்கான தேசிய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வைரலாகும் குறுந்தகவல்களில் துளியும் உண்மை இல்லை என தெளிவாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News