செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகா இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: எடியூரப்பா

Published On 2019-12-09 02:35 GMT   |   Update On 2019-12-09 02:35 GMT
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு நாளை (அதாவது இன்று) வெளியாகிறது. இதில் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும். அடுத்த 3½ ஆண்டுகளும் எனது தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அரசு பாடுபடும்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா கட்சியே வெற்றி பெறும். அப்போது எங்கள் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம்.

இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அவர் கூறுவது போல் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News