செய்திகள்
கட்டிட உரிமையாளர் ரேஹான்

டெல்லி: 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் கைது

Published On 2019-12-08 12:12 GMT   |   Update On 2019-12-08 12:12 GMT
டெல்லியில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லியில் அனாஜ் தானிய மண்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.



விபத்து நடந்த கட்டிடத்துக்கு டெல்லி தீயணைப்பு துறையினரிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெறப்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News