செய்திகள்
தீ விபத்து பகுதியை பார்வையிட்ட கெஜ்ரிவால்

டெல்லி தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதி - கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2019-12-08 06:46 GMT   |   Update On 2019-12-08 06:46 GMT
டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அமைந்துள்ளன. இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள அனாஜ் மண்டி என்ற இடத்தில் தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

டெல்லி  தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில். தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பார்வையிட்டார். விபத்து எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News