செய்திகள்
வாக்குப்பதிவு

ஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு

Published On 2019-12-07 10:15 GMT   |   Update On 2019-12-07 10:15 GMT
ஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது.

வாக்குப்பதிவு நடைபெற் 20 தொகுதிளில் ஜாம்ஷெட்பூர் மேற்கு, ஜாம்ஷெட்பூர் கிழக்கு ஆகிய தொகுதிகளில் மாலை 5 மணி வரையிலும், தொலைதூரங்களில் உள்ள மற்ற 18 தொகுதிகளில் 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 18 தொகுதிகளில் 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

குளிர்காலங்களில் பகல் நேரம் குறைவு என்பதால், அந்த பகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை உரிய நேரத்திற்குள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல ஏதுவாக வாக்குப்பதிவு  நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 18 தொகுகிளிலும் 1 மணி நிலவரப்படி சராசரியாக 45.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. எனவே, வாக்குப்பதிவின் முடிவில் சராசரியாக 60 முதல்  65 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
Tags:    

Similar News