செய்திகள்
பிரியங்கா காந்தி

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லை -பிரியங்கா காந்தி

Published On 2019-12-07 09:28 GMT   |   Update On 2019-12-07 09:28 GMT
உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் மத்தியில் எந்த பயமும் இல்லை என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட  பெண், நீதிமன்றத்திற்கு சென்றபோது கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.



இந்நிலையில், உன்னாவ் பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி  குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். பெண்ணை எரித்து கொன்ற குற்றவாளிகளுக்கு, பாஜகவில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த ஓராண்டாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், இங்கு பெண்களுக்கு இடமில்லை என மாநிலத்தை அவர் மாற்றியிருப்பதாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி கூறும்போது, “உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒருநாள் கூட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழாமல் இருந்ததில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதால் குற்றங்கள நிறுத்தப்படாது” என்றார்.
Tags:    

Similar News