செய்திகள்
துப்பாக்கி சூடு நடந்த வாக்குச்சாவடி

வாக்குச்சாவடியில் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Published On 2019-12-07 08:14 GMT   |   Update On 2019-12-07 08:14 GMT
ஜார்க்கண்ட் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட மோதலின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான தொகுதிகள் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகள் என்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி சிசாய் தொகுதியில் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.

கும்லா மாவட்டம் சிசாய் தொகுதியில் உள்ள பாக்னி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 36-ல் இன்று காலை முதலே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

இதுபற்றி ஜார்க்கண்ட் டிஜிபி கமல் நயான் சவுபே கூறுகையில், மோதலின்போது போலீசாரின் ஆயுதங்களை சிலர் பறிக்க முயன்றனர். வாக்குச்சாவடியை கைப்பற்றயும் முயன்றுள்ளனர். இதனால் அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்’ என்றார்.
Tags:    

Similar News