செய்திகள்
தேஜ் பகதூட் - அலகாபாத் உயர்நீதி மன்றம் - பிரதமர் மோடி

வாரணாசியில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

Published On 2019-12-06 11:14 GMT   |   Update On 2019-12-06 11:14 GMT
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
லக்னோ:

எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் கடந்த பாராளுமன்ற  தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தேஜ் பகதூர் யாதவ் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான சான்றிதழை இணைக்கவில்லை என்று கூறி தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.



இதை எதிர்த்து அவர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இதனால் மோடியை எதிர்த்து போட்டியிடும் அவரது ஆசை நிறைவேறவில்லை.

தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தவறு என்றும், வாரணாசி தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தேஜ் பகதூர் வழக்கு தொடர்ந்தார்.

வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னர், தனது தரப்பை எடுத்துரைக்க யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். 
இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மனோஜ் குப்தா, தேஜ் பகதூர் யாதவ் முன்வைத்த கோரிக்கையை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News