செய்திகள்
ஷகாலாவின் பெற்றோருடன் ராகுல் காந்தி

கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

Published On 2019-12-06 08:10 GMT   |   Update On 2019-12-06 08:10 GMT
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைக்குள் பாம்பு கடித்து உயிரிழந்த 10 வயது சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் வயநாட்டு அருகே சுல்தான் பத்தேரியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ்.  வக்கீல் ஆக பணியாற்றும் இவரது மனைவி சாஜனா. இவரும் வக்கீலாக உள்ளார். இவர்களின் மகள் ‌ஷகாலா (10). இவர் சுல்தான் பத்தேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி  மாலை 3.30 மணிக்கு மாணவி ‌ஷகாலா பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். பள்ளி வகுப்பறையில் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் இருந்த பாம்பு ‌ஷகாலாவை கடித்திருப்பது தெரியவந்தது.


 
தகவலறிந்து வந்த ‌ஷகாலாவின் பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ‌ஷகாலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



பாம்பு கடித்து இறந்த 10 வயது சிறுமியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான  ராகுல் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது பாராளுமன்ற தொகுதியான வயநாட்டுக்கு வந்துள்ளார். சுல்தான் பத்தேரியில் உள்ள  வக்கீல் அப்துல் அஜிஸ் வீட்டுக்கு சென்ற அவர் ஷகாலாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 
Tags:    

Similar News