செய்திகள்
வெங்காய விலை உயர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள்.

வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-12-05 09:32 GMT   |   Update On 2019-12-05 09:32 GMT
வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி உள்ளது. வெங்காயத்தின் விலையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெங்காயம், பருப்பு விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தலைமையில் எம்.பி.க்கள் இதில் பங்கேற்றனர்.

106 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு விடுதலையான மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரமும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அவர் கூறும்போது, “பாராளுமன்றத்தில் எனது குரலை யாரும் அடக்க முடியாது” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பதாகையையும் வைத்து இருந்தனர். மேலும் அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
Tags:    

Similar News