செய்திகள்
டி.ஆர்.பாலு, கனிமொழி

பிரதமர் மோடியுடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு -தமிழக பிரச்சினைகள் குறித்து கடிதம்

Published On 2019-12-04 08:14 GMT   |   Update On 2019-12-04 08:14 GMT
டெல்லியில் இன்று திமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்தனர்.
புதுடெல்லி:

தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் இன்று பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது தமிழகத்தின் 16 முக்கிய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் அளித்தனர். தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பிரதமரிடம் அளித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாநில ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்தில் மத்திய அரசுப் பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 90 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.7825 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது. முல்லைப்பெரியாறு, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News