செய்திகள்
மத்திய மந்திரி நித்யானந்த் ராய்

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை - மத்திய மந்திரி அறிவிப்பு

Published On 2019-12-01 07:13 GMT   |   Update On 2019-12-01 07:13 GMT
எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் வீரர்களுக்கு 100 நாள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளை ஒட்டியுள்ள இந்தியாவின் எல்லைப்பகுதிகளை இரவு, பகலாக கண்காணித்து ஊடுருவல் நிகழாமல் பாதுகாக்கும் பணியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் இன்று நடைபெற்ற எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய்,  வீரர்கள் தங்களது குடும்பத்தாருடன் இணைந்திருப்பதற்காக ஆண்டுக்கு 100 நாள் விடுமுறை அளிக்க மத்திய அரசு தன்னால் இயன்றதை செய்து வருவதாக தெரிவித்தார்.



மேலும், துணை ராணுவத்தினருக்கு உள்ளதுபோல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டு தொகை 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெறும் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் ஜம்முவில் இருந்து டெல்லி வருவதற்கு இலவச விமான வசதி, வீரதீர விருதுகளை பெற்ற வீரர்கள் மற்றும் கடமையின்போது வீரமரணம் அடைந்தவர்களின் மனைவியருக்கு டெல்லியில் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட சில அறிவிப்புகளையும் அவர் இன்று வெளியிட்டார்.
Tags:    

Similar News