செய்திகள்
சபரிமலையில் குவிந்த பக்தர்கள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 10 நாள் காணிக்கை தொகை இருமடங்காக உயர்வு

Published On 2019-11-30 09:01 GMT   |   Update On 2019-11-30 09:01 GMT
சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் முதல் பத்து நாட்களில் காணிக்கையாக கிடைத்த தொகை கடந்த ஆண்டைவிட இருமடங்காக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம்.
 
இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.



ஐயப்பன் கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் முதல் பத்து நாட்களில் காணிக்கையாக கிடைத்த தொகை கடந்த ஆண்டைவிட இருமடங்காக உயர்ந்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி அரவனை பாயாசம் விற்பனை மூலம் 15.47 கோடி ரூபாயும் உண்டியல் வசூல் மூலம் 13.76 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. மொத்த வருவாயாக 39.68 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டில் ஐயப்பன் கோவில் நடை திறந்த பின்னர் முதல் பத்து நாட்கள் நிலவரப்படி, அரவனை பாயாசம் விற்பனை மூலம் 6.72 கோடி ரூபாயும் உண்டியல் வசூல் மூலம் 8.34 கோடி ரூபாயும் மொத்த வருவாயாக 21.12 கோடி ரூபாய் கிடைத்திருந்தது என வாசு குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News