செய்திகள்
வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்- 13 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

Published On 2019-11-29 08:16 GMT   |   Update On 2019-11-29 08:16 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்த 13 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு நாளை தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதற்காக இந்த 13 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 892 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட தேர்தலில் 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 174 பேர் ஆண்கள், 15 பேர் பெண்கள்.

முதல்கட்ட தேர்தல் நடப்பதையொட்டி 13 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் ஓட்டுப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருவதற்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 7-ந்தேதி 2-ம் கட்டமாக 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 3-வது வாரம் தேர்தல் முழுமையாக நிறைவுபெறும்.

டிசம்பர் 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News