செய்திகள்
பாஜக கட்சியின் தலைவர்கள் அமித் ஷா, நரேந்திர மோடி, ஜேபி நட்டா

பாஜகவின் மனதில் இருப்பதைத்தான் பிரக்யா தாகூர் கூறியுள்ளார் - ராகுல் காந்தி

Published On 2019-11-28 11:44 GMT   |   Update On 2019-11-28 14:36 GMT
கோட்சே ஒரு தேசபக்தன் என பாஜகவின் மனது மற்றும் ஆன்மாவில் இருக்கும் கருத்தைத்தான் பிரக்யா தாகூர் வெளிப்படையாக கூறியுள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் ஆ. ராசா, 'நாதுராம் கோட்சே அவர் கொண்டிருந்த சித்தாந்தத்தின் காரணமாக மகாத்மா காந்தியின் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தார். அதனால்தான் அவரைக் கொல்வதற்கு முடிவெடுத்தார்' என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர், 'தேசபக்தரை நீங்கள் உதாரணமாக குறிப்பிடக்கூடாது' என்று பேசினார். 

அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தன் என கூறியதற்கு பிரக்யா தாகூர் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளது.



இந்நிலையில், பிரக்யா தாகூரின் சர்ச்சை கருத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

 'பயங்கரவாதி பிரக்யா தாகூர் மற்றொரு பயங்கரவாதி கோட்சேவை தேசபக்தன் என கூறியுள்ளார். இது இந்திய பாரளுமன்ற வரலாற்றில்
மிகவும் மோசமான நாள். 

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இதயம் மற்றும் ஆன்மாவில் இருக்கும் கருத்தைத்தான் பிரக்யா தாகூர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எவ்வளவுதான் மறைக்க நினைத்தாலும், மகாத்மா காந்தியை எவ்வளவு வணங்கினாலும் கோட்சே ஒரு தேசபக்தன் என்ற கருத்துத்தான் பாஜகவின் ஆன்மாவாக உள்ளது. இந்த உண்மை எப்படியும் வெளிவந்துவிடும்' இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News