செய்திகள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து 13 ஆயிரம் புகார்கள் - வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

Published On 2019-11-27 12:18 GMT   |   Update On 2019-11-27 12:18 GMT
வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து 13 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிழைப்புக்காக மற்ற நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வழக்கம் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது. 

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில்தான் இந்தியர்கள் அதிகம் பணிபுரிகின்றனர்.

வேலைக்கேற்ற ஊதியம் இல்லாமை, குறிப்பிட்ட வேலை எனக்கூறி வேறொரு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் சிக்கிய இந்தியர்கள் தாங்கள் பணிபுரியும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்திடம் உதவி கோரும் பல்வேறு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை மேற்கண்ட பிரச்சினைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து  13 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

‘உலகம் முழுவதும் 102 நாடுகளில் பல இந்தியர்கள் பணிபுரிகின்றனர். சரியாக சம்பளம் அளிக்காமல் மோசடி செய்யப்பட்டது உள்பட மொத்தம் 13 ஆயிரத்து 665 புகார்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை வந்துள்ளன. 

அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்களிடமிருந்து 3,844 புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு மொத்ததில் 17 ஆயிரத்து 379 புகார்கள் வந்தன’ என மாநில வெளியுறவுத்துறை மந்திரி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News