செய்திகள்
ப.சிதம்பரம்

அதிகாலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி கையொப்பம் கேட்பதா?: ப.சிதம்பரம் காட்டம்

Published On 2019-11-27 10:27 GMT   |   Update On 2019-11-27 10:27 GMT
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக அதிகாலை 4 மணிக்கே ஜனாதிபதியை எழுப்பி கையொப்பம் கேட்பதா? என மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதற்காக அதிகாலை 4 மணிக்கே ஜனாதிபதியை எழுப்பி கையொப்பம் கேட்பதா? என மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள  மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நாட்டில் நிகழும் அரசியல் நிலவரம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் மூலமாக சில கருத்துகளை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அவ்வகையில், சமீபத்தில் மகாராஷ்டிரா அரசியலில் புயலை கிளப்பிய தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு தொடர்பாக இன்று சில பதிவுகளை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



'மகாராஷ்டிராவில் நவம்பர் 23 முதல் 26 வரை நடந்த அரசியலமைப்பு விதிமீறல் இந்த ஆண்டின் அரசியலமைப்பு தினத்தின் நீங்காத நினைவாக நிலைத்திருக்கும்.

மகாராஷ்டிராவில் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கே ஜனாதிபதியை எழுப்பி அவரிடம் கையொப்பமிடுமாறு கேட்டது ஜனாதிபதி அலுவலகத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

காலை 9 மணிவரை காத்திருக்க ஜனாதிபதி அலுவலகத்தால் முடியாதா?' என கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், சிவசேனா தலைமையில் நாளை பதவியேற்கவுள்ள கூட்டணி அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News