செய்திகள்
சபரிமலை

பெண் ஆர்வலர்கள் வருகை எதிரொலி - சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

Published On 2019-11-27 09:45 GMT   |   Update On 2019-11-27 09:45 GMT
சபரிமலையில் தரிசனம் செய்ய பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி வந்ததை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:

சபரிமலையில் தரிசனம் செய்ய புனேவை சேர்ந்த பெண் ஆர்வலரான திருப்தி தேசாய் தலைமையில் 5 பெண்கள் கொச்சி வந்ததை தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறும்போது, திருப்தி தேசாய் வருகையில் சதி இருக்கும் என்று சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இதனால் அங்கு மீண்டும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் கூறும்போது, சபரிமலையில் இப்போது 2800 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

நிலக்கல்லில் இருந்து சன்னிதானம் வரை போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இங்கு பாதுகாப்பில் இருக்கும் போலீசாரை உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். சந்தேகப்படும் நபர்களை முழுமையாக விசாரிக்க அறிவுறுத்தி உள்ளோம், என்றார்.

இது தவிர சபரிமலை வரும் அனைத்து வாகனங்களிலும் இளம்பெண்கள் இருக்கிறார்களா? என்பதை பெண் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.
 
Tags:    

Similar News