செய்திகள்
கவர்னருடன் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா கவர்னருடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

Published On 2019-11-27 09:08 GMT   |   Update On 2019-11-27 12:11 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மும்பை:

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக அவசரகதியில் பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சட்டசபை பலப்பரீட்சையில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.



இதைதொடர்ந்து, 168 எம்.எல்.ஏ.க்களை வைத்திருப்பதாக கூறும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் மகாராஷ்டிரா மாநில அரசியல் வரலாறில் முதல் முறையாக சிவசேனா அங்கு கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தவ் தாக்கரேவுடன் அவரது மனைவி ராஷ்மி-யும் கவர்னர் மாளிகைக்கு வந்திருந்தார்.
Tags:    

Similar News