செய்திகள்
முதல் மந்திரியாக தேர்வான உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு - கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2019-11-26 14:58 GMT   |   Update On 2019-11-26 14:58 GMT
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை உத்தரவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும், துணை முதல் மந்திரி அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவை சேர்ந்த காளிதாஸ் கொலம்ப்கர் தேர்வு செய்யப்பட்டார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, நாளை காலை 8 மணிக்கு மகாராஷ்டிரா சட்டசபை கூடுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என கூட்டணி கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை மும்பையில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார் என தீர்மானம் நிறைவேற்றினர்.
Tags:    

Similar News