செய்திகள்
சஞ்சய் ராவத்

உத்தவ் தாக்கரே 5 ஆண்டுகள் முதல் மந்திரியாக இருப்பார் - சஞ்சய் ராவத்

Published On 2019-11-26 10:56 GMT   |   Update On 2019-11-26 10:56 GMT
மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரியாக 5 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொடர்வார் என அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று காலை உத்தரவிட்டது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து கடும் நெருக்கடி ஏற்பட்டதால் மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து  முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தொடர்வார் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், அஜித் பவார் துணை முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார், அவரும் எங்களுடன் இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முத்ல் மந்திரியாக உத்தவ் தாக்கரே 5 ஆண்டுகள் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News