செய்திகள்
அகமது பட்டேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது எடுத்தப் படம்

வெட்கங்கெட்டத்தனத்தின் உச்சக்கட்டம்: பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்

Published On 2019-11-23 09:19 GMT   |   Update On 2019-11-23 09:19 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக வெட்கங்கெட்டத்தனத்தின் அனைத்து எல்லைகளையும் பாஜக மீறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்றார்.
 
இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மும்பையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்களிடையே பேசிய காங்கிரஸ் மேலிட தலைவர் அகமது பட்டேல் கூறியதாவது:-

கூட்டணி ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்தியதாக கூறப்படுவது தவறான தகவலாகும். ஜனநாயகத்தை சிதறடித்துவிட்டு தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள இந்த நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் வரலாற்றில் கருப்புதினமாகும்.



எல்லா விஷயங்களும் ரகசியமாக அதிகாலை வேளையில் நடந்து முடிந்து விட்டது. எங்கோ, ஏதோ தவறு நடந்துள்ளது. இதைவிட வெட்கக்கேடானது எதுவுமே இருக்க முடியாது.

இதன் மூலம் அவர்கள் வெட்கங்கெட்டத்தனத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டனர். இப்போதும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றாகவே இணைந்திருக்கிறோம். பட்னாவிஸ் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை நாங்கல் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பட்னாவிஸ் பதவி ஏற்றதற்கு எதிராக அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் நாங்கள் போராடுவோம்.
Tags:    

Similar News