செய்திகள்
கோப்புப்படம்

ஜார்க்கண்டில் நக்சல் தாக்குதலில் 4 போலீசார் பலி

Published On 2019-11-23 06:57 GMT   |   Update On 2019-11-23 06:57 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசாரின் வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் பலியானார்கள்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காடு, மலைகளில் பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை ஒடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் ரோந்து செல்லும் போது அவர்கள் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் லேட்ஹெர் மாவட்டத்திற்குட்பட்ட சன்ட்வா பகுதியில் போலீசார் வாகனத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது போலீசாரின் வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் சுக்ரா சரான், மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் சிக் கந்தர் சிங், ஜமுனா பிரசாத் மற்றும் சாம்பு பிரசாத் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

நக்சலைட் தாக்குதலுக்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ரகுபர் தாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பலியான 4 போலீஸ்காரர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News