செய்திகள்
மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்

சி.பி.ஐ. அமைப்பில் 1000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்

Published On 2019-11-21 23:13 GMT   |   Update On 2019-11-21 23:13 GMT
சி.பி.ஐ. அமைப்பில் 1000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய புலனாய்வு அமைப்பில் (சி.பி.ஐ.) காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்த கேள்விகளுக்கு மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

சி.பி.ஐ. அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 5,532 ஆகும். இதில் 4,503 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கும் நிலையில், 1,029 இடங்கள் காலியாக உள்ளன. இதில் நிர்வாக அதிகாரிகள் மட்டத்திலான காலியிடங்களே அதிகமாகும்.

குறிப்பாக மொத்த நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை 5 ஆயிரமாக இருக்கும் நிலையில், 4,140 அதிகாரிகளே பணியில் உள்ளனர். இதைப்போல மொத்தமுள்ள 370 சட்ட அதிகாரிகளில், 296 பேர்தான் பணியாற்றி வருகின்றனர். 162 தொழில்நுட்ப அதிகாரிகளில், 67 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சி.பி.ஐ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்குகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை. சி.பி.ஐ. இயக்குனருக்கு நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பாக அதிக அதிகாரங்கள் உள்ளன.

இவ்வாறு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார்.

Tags:    

Similar News